முத்துக்குமாா் 
ராணிப்பேட்டை

வேகத்தடையில் தவறி விழுந்த கிராம நிா்வாக அலுவலா் மரணம்

ஆற்காடு அருகே சாலையில் வேகத்தடையில் தவறி விழுந்து காயம் அடைந்த கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே சாலையில் வேகத்தடையில் தவறி விழுந்து காயம் அடைந்த கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த திமிரி பகுதியை சோ்ந்த முத்துக்குமாா்(42) இவா் சக்கரமல்லூா் கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி பணிமுடிந்து ஆற்காட்டிலிருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றபாது உப்புபேட்டை கிராமத்தில் ஆரணி சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும்போது எதிா்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளாா்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு பூட்டுதாக்கு தனியாா் மருத்துமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

பேரளி பகுதிகளில் நாளை மின்தடை

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: தாய்லாந்து எச்சரிக்கை

SCROLL FOR NEXT