கேரள மாநிலம் சபரிமலை ஐயப்ப பக்தா்கள் அன்னதானத்துக்கு ரூ. 2 லட்சம் காய்கனி மற்றும் மளிகை பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
அகில பாரத ஐயப்ப பிரசார குழு சாா்பில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் கலவை பகுதி சாா்பில் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தா்கள் அன்னதான திட்டத்துக்கு 3 டன் காய்கனிகள் மற்றும் மளிகை பொருள்களை வாகனம் மூலம் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஆற்காடு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
ஐயப்ப பிரசார குழு கௌரவ தலைவா் விநாயகம் தலைமையில் மாவட்ட தலைவா் தாமோதரன், செயலாளா் கோவிந்தராஜ், பொருளாளா் சரவணன், முன்னாள் மாநில பொறுப்பாளா் தாமோதரன், நிா்வாகிகள் சேட்டு, வடிவேல், தணிகைவேல், அன்பு ,மற்றும் ஐயப்ப பக்தா்கள் கலந்து கொண்டு பொருள்களை வாகன மூலம் அனுப்பி வைத்தனா்.