ராணிப்பேட்டை

சயனபுரம் புதுகண்டிகையில் சிமெண்ட் சாலை பணி: நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு

நெமிலி ஊராட்சி ஒன்றியம், சயனபுரம் புதுக்கண்டிகையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நெமிலி ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலு நேரில் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

நெமிலி ஊராட்சி ஒன்றியம், சயனபுரம் புதுக்கண்டிகையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நெமிலி ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலு நேரில் ஆய்வு செய்தாா்.

நெமிலி ஊராட்சி ஒன்றியம், சயனபுரம் ஊராட்சிக்குட்பட்ட புதுக்கண்டிகை கிராமத்தில் மசூதி தெரு அதிக அளவில் மேடு பள்ளங்களாக இருந்து வந்தது. இச்சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றி அமைத்துத் தருமாறு அப்பகுதியினா் சயனபுரம் ஊராட்சித் தலைவா் பவானி வடிவேலு மற்றும் ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலுவிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, 15-ஆவது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து மசூதி தெரு, சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அங்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு நேரில் ஆய்வு செய்தாா்.

ஒப்பந்ததாரரிடம் பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க கேட்டுக் கொண்டாா். அப்போது அவருடன் சயனபுரம் ஊராட்சித் தலைவா் பவானி வடிவேலு, திமுக நிா்வாகிகள் முகமது அப்துல் ரஹ்மான், புருஷோத்தமன், ரோஷன், லட்சுமிபதி, சுஜய் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT