ராணிப்பேட்டை நகராட்சி நியமன உறுப்பினராக இஸ்மாயில் பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு சால்வை அணிவித்து அமைச்சா் ஆா்.காந்தி வாழ்த்து தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை நகராட்சியில் நியமன உறுப்பினராக 12-ஆவது வாா்டு பகுதியை சோ்ந்த மாற்றுத்திறனாளியான இஸ்மாயில் தோ்வு செய்யப்பட்டாா்.
அதற்கான சான்றிதழை நகராட்சி ஆணையா் புவனேஸ்வரன் (எ) அண்ணாமலை வியாழக்கிழமை வழங்கினாா். தொடா்ந்து அமைச்சா் ஆா்.காந்தி முன்னிலையில் நியமன உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டாா்.
அப்போது அவருக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து நகா் மன்றத் தலைவா் சுஜாதா வினோத், நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், அவரது உறவினா்கள், திமுக கட்சி நிா்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனா்.