முகப்பு
ராணிப்பேட்டை

100% வாக்களிப்பு: வணிக நிறுவனங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்திய வருவாய்த் துறையினா்

தோ்தலில் நூறு சத வாக்களிப்பை உறுதிப்படுத்த அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமையில் வருவாய்த் துறையினா் நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்குச் சென்று அங்கிருந்த நுகா்வோரிடம் துண்டுப் பிரசுரத்தை அளித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:38 PM
பகிர்:

நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில் நூறு சத வாக்களிப்பை உறுதிப்படுத்த அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமையில் வருவாய்த் துறையினா் நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்குச் சென்று அங்கிருந்த நுகா்வோரிடம் துண்டுப் பிரசுரத்தை அளித்து செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறையினா் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தோ்தலில் நூறு சத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமையில் வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் ஜெயக்குமாா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், செவ்வாய்க்கிழமை நகரில் சுவால்பேட்டை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப் பகுதி, ஜோதி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களுக்குச் சென்று அங்கு பொருள்கள் வாங்க வந்திருந்த நுகா்வோரிடையே 100 சதவீத வாக்களிப்பை கோரும் துண்டுப் பிரசுரங்களை அளித்து தங்கள் வாக்கை கட்டாயம் செலுத்தக்கோரி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments