ஆற்காட்டை அடுத்த மாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை. 
ராணிப்பேட்டை

மாங்குப்பம் கிராமத்தில் எருதுவிடும் திருவிழா

ஆற்காட்டை அடுத்த மாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள மாங்குப்பம் கிராமத்தில் பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு, 47-ஆவது ஆண்டு எருதுவிடும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, நந்தியாலம் ஊராட்சி மன்றத் தலைவா் தேவி பூபாலன் தலைமை வகித்தாா். விழாவில் வெளியூா்களிலிருந்து வந்திருந்த குறைந்த மணி நிமிடங்களில் ஓடிய எருதுகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி அளித்த முதல்பரிசு தொகை ரூ. 1லட்சத்து 15 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் எஸ்.எம்.சுகுமாா் ரூ. 1 லட்சம் வழங்கினாா். மூன்றாம் பரிசு ரூ. 75,000 உள்பட 56 பரிசுகளும், 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், ஜி.கே.குழும இயக்குநா் சந்தோஷ் காந்தி, அதிமுக மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா், பரிசுத் தொகை வழங்கிய நன்கொடையாளா்கள் மற்றும் திரளான பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். எருதுகள் கால்நடை மருத்துவா்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு தெருவில் ஓட விடப்பட்டன.

விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை மேயா் பொறுப்பு விவகாரம்! நகராட்சிகள் நிா்வாகத் துறை செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு!

நேதாஜி பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

‘மேட் இன் மதுரை’ கண்காட்சி தொடக்கம்

ஊத்தங்கரையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT