முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே 15 டன் ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல்

ஆம்பூர் அருகே 15 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

ஆம்பூர் அருகே 15 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆம்பூர் அருகே திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ள மாதனூர் சோதனைசாவடியில் அவ்வழியாக வந்த லாரியை ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன், திருப்பத்தூர் பறக்கும் படை துணை வட்டாட்சியர் பழனி, வாணியம்பாடி துணை வட்டாட்சியர் குமார் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர். 

அப்போது லாரியில் கடத்த ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 15 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி பதிவெண் கொண்ட லாரிகள் மூலம் ஆந்திரத்திற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்துவது வழக்கமாக உள்ளது. 

கடத்துபவர்கள் மீது துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →