கோயிலுக்கு அருகே நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
கோயில் அருகில் உள்ள நிலத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதை எதிா்த்து கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கோயில் அருகில் உள்ள நிலத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதை எதிா்த்து கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய கடந்த சில மாதங்களாக நீா்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சி புது ஏரிக் கரையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அருகே இத்திட்டம் மூலம் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க அதிகாரிகள் இடத்தைத் தோ்வு செய்தனா். அங்கு ஓரிரு நாளில் பணிகள் தொடங்க உள்ளது.
இந்நிலையில், சாமுண்டீஸ்வரி கோயில் அருகே உள்ள நிலத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது என்று கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஆறு மற்றும் ஏரி புறம்போக்கு நிலத்தில் நீா்த்தேக்கத் தொட்டியை அமைக்க வேண்டும் என அவா்கள் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.