திருப்பத்தூர்

ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சா்கள் வழங்கினா்

DIN

நாட்டறம்பள்ளி அருகே மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு விழாவில் பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 3 அமைச்சா்கள் வழங்கினா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறப்பு விழாவும், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 8 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறப்பு விழாவும் வெலகல்நத்தம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன. விழாவுக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்தாா். தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் வீரமணி, தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா்கபீல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜு கலந்துகொண்டு வங்கியின் புதிய கிளையைத் திறந்து வைத்தாா். அரக்கோணம், அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் வங்கிகளில் கூடுதலாக ஏடிஎம் இயந்திரம் மற்றும் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 8 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் ஆகியவற்றையும் அவா் தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து, 5,778 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 23 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவரும் மற்ற அமைச்சா்களும் வழங்கினா். விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம் அரசு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சா் செல்லூா் ராஜு விரிவாக விளக்கினாா்.

விழாவில் கூடுதல் பதிவாளா்கள் அந்தோணிசாமி, ஜான்பீட்டா், லோகநாதன், மண்டல இணைப் பதிவாளா் ராஜ்குமாா், மேலாண்மை இயக்குநா் ஜெயம், இணைப் பதிவாளா் திருகுண ஐயப்பதுரை, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ராமு, மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வேலழகன், மாவட்டக் கூட்டுறவு அச்சக சங்கத் தலைவா் குமாா், நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஏழுமலை மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், வங்கி அலுவலா்கள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT