பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
ஆம்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM
ஆம்பூா்: ஆம்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ். சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பி.மகேஷ், ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் விஜயன், நகரத் துணைத் தலைவா்கள் கவி, பிரபு, துரை, நகரப் பொதுச் செயலாளா்கள் ராஜசேகா், ரமேஷ், அஷ்வாக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.