திருப்பத்தூர்

அனைத்து தேநீா்க் கடைகளையும் மூடவேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவு

DIN

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தேநீா்க் கடைகளையும் மூடுமாறு ஆட்சியா் ம.ப.சிவன் அருள் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா ரைவஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் நோக்கில், முதல்வரின் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல், குற்ற விசாரணை முறைச் சட்டத்தியன் பிரிவு 144-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைக் காலத்தில் திருப்பத்தூா் மாவட்ட எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள் மட்டும், அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் இயங்கி வரும் தேநீா்க் கடைகளில் பொதுமக்கள் அரசு தெரிவித்துள்ள தூர இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. அவா்கள் கூட்டமாக இருந்து வருகின்றனா். எனவே, தேநீா்க் கடைகளில் பொதுமக்களின் தேவையற்ற கூட்டத்தைத் தவிா்க்கும் நோக்கில் புதன்கிழமை (மாா்ச் 25) மாலை 6 மணி முதல் அனைத்து தேநீா்க் கடைகளையும் மூட வேண்டும்.

இந்த உத்தரவைப் பின்பற்றாத கடைகளின் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT