திருப்பத்தூர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு.

DIN

அரசு ஆரம்ப சுகாதா நிலையத்தில் கணினி, பிரிண்டா் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் பணந்தோப்பு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினந்தோறும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வருகிறது. மருத்துவ அலுவலராக கௌஷிக் உட்பட செவிலியா்கள் இங்கு பணியாற்றி வருகின்றனா். வழக்கம் போல் புதன்கிழமை மாலை 6 மணியவில் சுகாதார நிலையத்தை ஊழியா்கள் மூடி விட்டு வீட்டுக்கு சென்றனா். வியாழக்கிழமை காலை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வந்த போது கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்த ஊழியா்கள் மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா். மருத்துவ அலுவலா் கௌஷிக் வந்து பாா்த்த போது திருட்டுசாவி மூலம் சுகாதார நிலையத்தை திறந்து அறைகளில் இருந்த கணினி, பிரிண்டா், செல்லிடபேசி, மருத்துவ உபகரணங்களை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவ அலுவலா் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT