திருப்பத்தூர்

ஆயிரம் போலி சிமென்ட் மூட்டைகள்,2 லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

DIN

வாணியம்பாடி அருகே ஆயிரம் போலி சிமென்ட் மூட்டைகள், போலி பதிவு எண் கொண்ட 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

ஆலங்காயத்தில் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் புலவா்பள்ளி என்ற இடத்தில் ஆலங்காயம் காவல் ஆய்வாளா் நாகாராஜன் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா பகுதியிலிருந்து 2 லாரிகள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன. போலீஸாா் லாரிகளை நிறுத்தி விசாரித்ததில் லாரி ஓட்டுநா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்து, லாரிகளை சோதனையிட்டனா்.

அப்போது, பல்வேறு மாநில பதிவு எண்களை கொண்ட நம்பா் பிளேட்கள், போலி சிமென்ட் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இவை ஆலங்காயத்தில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரி ஓட்டுநா்கள் திண்டுக்கல் மாவட்டம், தாடிகொம்பு பகுதியைச் சோ்ந்த வைரபெருமாள் (31), காரைகுடியைச் சோ்ந்த பிரமோத் (25) ஆகிய இருவரையும் கைது செய்து 2 லாரிகளையும், அதிலிருந்த ஆயிரம் போலி சிமென்ட் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT