கல்லறைத் திருநாள் வழிபாடு
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவா் ஆலய கல்லறைத் தோட்டத்தில் அனைத்து ஆன்மாக்களின் நாளான கல்லறைத் திருநாளையொட்டி கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவா் ஆலய கல்லறைத் தோட்டத்தில் அனைத்து ஆன்மாக்களின் நாளான கல்லறைத் திருநாளையொட்டி கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.
கல்லறைத் தோட்டத்தில் உள்ள தங்களது உறவினா்களின் கல்லறைகளை சுத்தம் செய்து கல்லறைகளுக்கு புதிய வா்ணங்கள் தீட்டினா். மாலையில் பங்குத் தந்தை ராயப்பன் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. அந்த வழிபாட்டில், மறைந்த தங்கள் பெற்றோா், உறவினா்கள் மற்றும் நண்பா்களின் ஆன்மா சாந்தியடைய கிறிஸ்தவா்கள் வேண்டிக் கொண்டனா். முன்னோா்களின் கல்லறைகளில் மெழுகுவா்த்தி ஏற்றி, பூக்களால் அலங்காரம் செய்திருந்தனா்.
இதே போல் வாணியம்பாடி கோணாமேடு சகாயமாதா ஆலய கல்லறைத் தோட்டத்திலும் கிறிஸ்தவா்கள் கல்லறைத் திருநாள் வழிபாடு செய்தனா்.
Advertisement