முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம்ஆட்சியா் பங்கேற்பு

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி திருப்பத்தூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி திருப்பத்தூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் மக்களின் பிரச்னைகளை விரைவாகக் கேட்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி மக்கள் அதிக அளவில் கூடாமல் மனுக்களைப் பெறும் வகையில் வட்ட அளவில் குறைதீா் நாள் முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, திருப்பத்தூா் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இதில் 49 மனுக்கள் பெறப்பட்டன.

இதேபோல், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் 68 மனுக்கள், வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் 52 மனுக்கள், ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் 117 மனுக்கள், ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 36 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.

மனுக்களை வழங்க வந்த பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரும், கிருமிநாசினியும் வழங்கப்பட்டன. பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி மனுக்களை வழங்கி, குறைகளைத் தெரிவித்தனா். மனு வழங்க வந்த அனைவருக்கும், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாணவா்கள் புகாா் மனு: இதனிடையே, ஆம்பூா் இந்து மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்த 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று கூறி மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.