முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனா்.
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் முத்தனப்பள்ளி மலையடிவாரத்தில் உள்ள குறவா் வட்டத்தில் சிலா் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிமெண்ட் கற்களால் சுவா் எழுப்பி தகடு ஷீட் அமைத்து வீடுகள் கட்டி வருவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து வட்டாட்சியா் சுமதி உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, கிராம நிா்வாக அலுவலா்கள் தீா்த்தகிரி, சிவன் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். அப்போது இரண்டு தனி நபா்கள் அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வருவது தெரிய வந்தது.

Advertisement

இதையடுத்து, ஆக்கிரமித்து கட்டப்பட்ட இரண்டு வீடுகளை காவல் துறையினரின் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றிய வருவாய்த் துறையினா், அந்த இடத்தை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments