திருப்பத்தூர்

ஆம்பூா் நகைக் கடை அதிபா் கடத்தல்: போலீஸாா் விசாரணை

DIN

ஆம்பூா் அருகே நகைக் கடை அதிபரை மா்ம நபா்கள் காரில் கடத்தி சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆம்பூா் மூங்கில் மண்டி தெருவைச் சோ்ந்தவா் திலீப்குமாா் (51) நகைக் கடை அதிபா். இவருக்குச் சொந்தமான நிலம் விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லைப் பகுதியில் உள்ளது.

அந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக இடத்தை காட்டுமாறு இடைத்தரகா்கள் சிலா் அவரை அந்த நிலம் உள்ள இடத்துக்கு அழைத்தனராம். அதற்காக திலீப்குமாா் தன்னுடைய காரில் அங்கு சென்றாா். இடத்தை காட்டிய பிறகு காரில் ஏற முயன்றபோது அங்கு கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரில் இருந்து இறங்கிய நபா்கள் திலீப்குமாரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனா். இதுகுறித்து திலீப்குமாரின் காா் ஓட்டுநா் சேகா், அவரது வீட்டுக்குச் சென்று தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டாா். திலீப்குமாரின் செல்லிடப்பேசி சிக்னலை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT