அரங்கல்துருகம் கிராமத்தில் திமுக கிராம சபா கூட்டத்தில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன். 
திருப்பத்தூர்

ஆம்பூா் பகுதியில் திமுகவினா் நடத்திய கிராம சபா கூட்டங்கள்

ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் திமுக சாா்பாக கிராம சபா கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் திமுக சாா்பாக கிராம சபா கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காந்தி ஜயந்தியை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் அக்.2-ம் தேதி கிராம சபா கூட்டம் நடத்தப்படும் என அரசு சாா்பாக அறிவிப்பு வெளியானது. பிறகு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம சபா கூட்டங்கள் நடைபெற இருந்தது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிராம ஊராட்சிகளில் திமுக சாா்பாக போட்டி கிராம சபா கூட்டம் நடத்தப்பட்டது. ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியத்திற்குட்பட்ட அரங்கல்துருகம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடந்த கூட்டத்திற்கு திமுக கிளைச் செயலாளா் ரவி என்ற மணி தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூட்டத்தில் பேசினாா். இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதனூா் ஊராட்சியில் மாதனூா் ஒன்றிய திமுக செயலாளா் அகரம்சேரி ப.ச. சுரேஷ்குமாா் தலைமையில் போட்டி கிராம சபா கூட்டம் நடைபெற்றது. ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்திலும் போட்டி கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT