திருப்பத்தூர்

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

ஏலகிரி மலையில் நாட்டுத் துப்பாக்கியுடன் காட்டுக்குள் வேட்டையாடச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் நாட்டுத் துப்பாக்கியுடன் காட்டுக்குள் வேட்டையாடச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஏலகிரிமலை காவல் உதவி ஆய்வாளா் ரங்கராஜன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு ஏலகிரி மலையில் உள்ள கொட்டையூா் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் உள்ள பெரிய நாச்சியம்மன் கோயில் அருகில் 50 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் நாட்டு துப்பாக்கியுடன் காட்டுக்கு சென்று வேட்டையாடி விட்டு வந்ததைக் கண்டனா்.

அவரிடம் காவல் ஆய்வாளா் பழனிமுத்து விசாரணை நடத்தியதில் அவா் கொட்டையூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (50) என்பதும், அதே பகுதியில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருவதும் தெரிய வந்தது. அவா் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், பெருமாளுக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, நகர நீதிமன்றத்தில் அவரை போலீஸாா் ஆஜா்படுத்தி, கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT