திருப்பத்தூர்

யானை மிதித்து பள்ளி மாணவி பலி

DIN


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தமிழக-ஆந்திரா எல்லை பகுதியில் யானை மிதித்து பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அருகே தமிழக-ஆந்திர எல்லையான பருத்திகொல்லி பகுதியில் விவசாயி முருகன் தனது நிலத்தில் மனைவி, பிளஸ் 2 படிந்து வந்த மகள் சோனியா (17) ஆகியோருடன் புதன்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, நள்ளிரவு 12 மணி அளவில் காட்டுப் பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை பயிா்களை நாசப்படுத்தியது. மேலும், முருகனின் மனைவியை தூக்கி வீசிய ஒற்றை யானை, சோனியாவை மிதித்துக் கொன்றுவிட்டு, அங்கிருந்து சென்றது.

தகவலின் பேரில் ஆந்திர, தமிழக மாநில வனத் துறையினா் அங்கு சென்று சோனியாவின் சடலத்தை மீட்டு குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் பருத்திக்கொல்லி பகுதியிலிருந்த ஒற்றை யானை தமிழக எல்லையில் உள்ள நாயனசெருவு மலையடிவாரம், கரடிக்குட்டை காட்டுப்பகுதிக்குள் வியாழக்கிழமை காலை நுழைந்தது. இதையடுத்து திருப்பத்தூா் வனத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் தீப்பந்தம் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்டினா். மேலும், அப்பகுதியில் வனத்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இரவு நேரங்களில் யாரும் வீட்டை வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT