திருப்பத்தூர்

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மன நலம் பாதிக்கப்பட்டோா்

DIN

திருப்பத்தூரில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மன நலம் பாதிக்கப்பட்டோரை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

திருப்பத்தூா் ரயில் நிலையம் அருகே தமிழக அரசின் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் பல்வேறு மாநிலத்தைச் சோ்ந்த 140 மன நலம் பாதிக்கப்பட்டோா் சிகிச்சையில் உள்ளனா்.

தோ்தலை முன்னிட்டு 77 ஆண்கள், 38 பெண்கள் உள்ளிட்ட 115 பேருக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வாக்காளா் பெயரில் பட்டியலில் சோ்க்கப்பட்டு, அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. அவா்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன்படி திருப்பத்தூா் சி.கே.எஸ்.மணி நகராட்சி துவக்கப் பள்ளியிலும், அரசினா் மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் 115 போ் வாக்களித்தனா். இதற்கான ஏற்பாட்டை காப்பகத்தின் செயலாளா் சொ.ரமேஷ் உள்ளிட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT