திருப்பத்தூர்

ஆந்திரத்துக்கு லாரிகளில் கடத்தல்: 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

வாணியம்பாடி: வேலூரிலிருந்து வாணியம்பாடி வழியாக லாரிகளில் ஆந்திரத்துக்கு கடத்தவிருந்த 40 டன் ரேஷன் பிடிபட்டது.

மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினா் வாணியம்பாடியை அடுத்த புத்துகோவில் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனை நடத்தினா்.

அப்போது வேலூரில் இருந்து வந்த 2 லாரிகளை மடக்கி சோதனையிட்டனா். அதில் ஒரு லாரியிலிருந்த ஓட்டுநா் தப்பி ஓடி விட்டாா். மற்றொரு லாரியின் ஓட்டுநா் யோகேந்திரன் என்பவரை போலீஸாா் மடக்கி பிடித்தனா். பின்னா் சோதனையிட்டதில் 2 லாரிகளிலும் சுமாா் 40 டன் கடத்தல் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் வேலூா் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து 2 லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வேலூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தலில் தொடா்புடைய நபா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT