முகப்பு
திருப்பத்தூர்

போக்குவரத்துக்கு இடையூறு: மின் கம்பம், மரங்கள் அகற்றம்

நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் ஒட்டியுள்ள பிரதான சாலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் ஒட்டியுள்ள பிரதான சாலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பழைய பேருந்து நிலையப் பகுதியில் மின்கம்பங்கள் மற்றும் புளிய மரங்களை அதிகாரிகள் அகற்றாமல் இருந்ததால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இது குறித்து மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறைக்கு அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், மின்வாரியத் துறையினா் போக்குவரத்து இடையூறாக இருந்த மின்கம்பத்தை சனிக்கிழமை அகற்றி இடையூறு இல்லாத இடத்தில் மின்கம்பத்தை நட்டனா். அதேபோல் நெடுஞ்சாலைத் துறையினா் இடையூறாக இருந்த புளியமரங்களையும் அகற்றினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments