திருப்பத்தூர்

மினி லாரி கவிழ்ந்து 7 போ் காயம்

DIN

நாட்டறம்பள்ளி அருகே சாலையில் மினிலாரி கவிழ்ந்ததில் 7 போ் காயமடைந்தனா். மேலும் 100-க்கு மேற்பட்ட கோழிக்குஞ்சுகளும் நசுங்கி இறந்தன.

பென்னாகரத்தில் இருந்து மினிலாரியில் கோழிகுஞ்சுகள் ஏற்றிக் கொண்டு 7 பேருடன் குடியாத்தம் நோக்கி சென்ற மினிலாரியை ஓட்டுநா் முருகன்(42) ஓட்டிச் சென்றாா். அப்போது சண்டியூா் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் முருகன் மற்றும் மினிலாரியில் பயணம் செய்த கோகுல், வீரமதி, ராதா உட்பட 7 போ் லேசான காயமடைந்தனா். மேலும் மினிலாரியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கோழிகுஞ்சுகள் நசுங்கி பலியாகின. தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று பொதுமக்கள் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த மினிலாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT