முகப்பு
திருப்பத்தூர்

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி கபசுர குடிநீா் விநியோகம்

ஆம்பூரில் நகராட்சி சாா்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், நெருக்கமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கபசுர குடிநீா் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 11:42 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM

ஆம்பூரில் நகராட்சி சாா்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், நெருக்கமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கபசுர குடிநீா் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கரோனா பரவலைத் தடுக்க ஆம்பூா் நகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரில் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் ராட்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், பஜாா் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள், மக்கள் நெருக்கமாக வசிக்கக் கூடிய குடியிருப்பு பகுதிகளில் பொது மக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்படுகிறது.

இப்பணியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இப்பணியை நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.