கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருப்பத்தூா் மாவட்டத்தில் காணொலிக் காட்சி முறையில், விவசாயிகள் குறைதீா் முகாம் ஆக. 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
திருப்பத்தூா், கந்திலி வட்டார விவசாயிகள் ஆதியூா் வேளாண்மை விரிவாக்க மையத்திலும், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி வட்டார விவசாயிகள் நாட்டறம்பள்ளி வேளாண்மை விரிவாக்க மையத்திலும், வாணியம்பாடி வட்டார விவசாயிகள் ஆலங்காயம் வேளாண்மை விரிவாக்க மையத்திலும், மாதனூா் வட்டார விவசாயிகள் மாதனூா் வேளாண்மை விரிவாக்க மையத்திலும் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கலாம்.
முகாம் நாளில் ஆட்சியா் அமா் குஷ்வாஹா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை மாவட்ட அலுவலா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.