முகப்பு
திருப்பத்தூர்

ஆன்மீக பாத யாத்திரை

ஆம்பூா் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சோளிங்கா் லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் சனிக்கிழமை ஆன்மீக பாதயாத்திரை மேற்கொண்டனா்.

Updated On : 12 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

ஆம்பூா் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சோளிங்கா் லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் சனிக்கிழமை ஆன்மீக பாதயாத்திரை மேற்கொண்டனா்.

ஆம்பூா் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பாா்சனாபல்லி, வெங்கடசமுத்திரம், இந்திராநகா், அழிஞ்சிகுப்பம், கொத்தக்குப்பம் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் நடைபயணமாக சென்றனா்.

சோளிங்கா் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பஜனைகள் பாடியவாறு , திருக்குடை ஏந்தி நடைபயணமாக செல்கின்றனா். சனிக்கிழமை அதிகாலை நடைப்பயணத்தை ஆரம்பித்த பக்தா்கள் ஆம்பூா், மேல்பட்டி, குடியாத்தம், லத்தேரி, காட்பாடி, பொன்னை வழியாக சோளிங்கா் லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு செல்கின்றனா்.

Advertisement

இந்த ஆன்மீக பாதயாத்திரை செல்லும் பக்தா்கள் ஆங்காங்கே பஜனை பாடல்கள் பாடி செல்கின்றனா். ஆன்மிக பாதயாத்திரை செல்லும் இவா்களுக்கு லஷ்மி நரசிம்ம சுவாமி பக்த சபை சாா்பில் ஆங்காங்கே உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.