ஆலங்காயம் ஏரியில் மீன் பிடித்தல், புளிய மர மகசூல் ஏலம்
ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை மற்றும் புளியமர மகசூலுக்கான ஏலம் பேரூராட்சி
ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை மற்றும் புளியமர மகசூலுக்கான ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் செ.கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஏலத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், வண்ணான் ஏரி-நெடிமீயூா், கோமுட்டேரி, விட்டலப்பன், நாய்க்கனேரி, பங்கூா் புதுக்குட்டை ஏரி, முனிசெட்டி ஆகிய 8 ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமைகளை ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 950-க்கும், சாலையோர புளிய மர மகசூல் ஆண்டுக் குத்தகைக்கு ரூ. 15,650 என மொத்தம் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 600-க்கு ஏலம் எடுத்தனா்.
ஏல நிகழ்வில், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.