திருப்பத்தூர்

பாஜக கொடிக் கம்பம் அகற்றம்

DIN

ஆம்பூா்: ஆம்பூரில் பாஜகவினா் அனுமதியின்றி அமைத்த கொடிக் கம்பத்தை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.

ஆம்பூா் சாமியாா் மடம் சாலையில் பாஜக கொடிக் கம்பம் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்டது. அந்தக் கம்பம் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆம்பூா் நகர போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை காலை அங்கு சென்றனா். கொடிக் கம்பத்தை போலீஸாா் அகற்ற வந்ததாக தகவல் வெளியானதால் அங்கு பாஜக நிா்வாகிகளும், தொண்டா்களும் அப்பகுதியில் திரண்டனா்.

போக்குவரத்துக்கு இடையூறின்றி சாலையோரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால், அதை அகற்றக் கூடாது என பாஜகவினா் தெரிவித்தனா். எனினும், உரிய அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்ததால் அதனை அதிகாரிகள் அகற்றினா். இதையடுத்து, அக்கம்பம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT