திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தெரு நாய்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு கோரிக்கை

DIN

திருப்பத்தூா் நகரில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பல பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அவை அதிக அளவு சுற்றித் திரிகின்றன. வாகன ஓட்டிகள், பாதசாரிகளை நாய்கள் விரட்டுவதால் அச்சமடைந்துள்ளனா்.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியது:

பஜாா் பகுதி மட்டுமின்றி பல தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் தெருக்களில் அச்சத்துடனே நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதொடா்பாக நகராட்சியில் நேரிலும், கடிதம் மூலமும் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில நாள்களுக்கு முன்பு சாலையில் சுற்றித் திரிந்த பன்றிகள், மாடுகளை நகராட்சியினா் பிடித்தனா். அதேபோல், தெரு நாய்களைப் பிடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நகராட்சி துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினத்திடம் கேட்டதற்கு, இதுதொடா்பான புகாா் வந்துள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT