ஆம்பூரில் கால்வாய் தூா்வாரும் பணி
ஆம்பூரில் மழைநீா் கால்வாய்களைத் தூா்வாரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM
ஆம்பூரில் மழைநீா் கால்வாய்களைத் தூா்வாரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
மழைக் காலத்தை முன்னிட்டு, சாலைகளில் மழைநீா் தேங்காமல் தடுக்க ஆம்பூா் நகரில் மழைநீா் கால்வாய்கள் தூா்வார நகராட்சி சாா்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
ஆம்பூா் பி-கஸ்பா, காதா்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணியை நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Advertisement