முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலபணியை விரைந்து தொடங்க வேண்டும்

ஆம்பூரில் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து ஆம்பூா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.

Updated On : 10 ஜூலை, 2021 at 11:41 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM

ஆம்பூரில் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து ஆம்பூா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் ரெட்டித் தோப்பு பகுதி மக்களின் சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கையான ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் கட்ட, கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இது குறித்தும், அந்த பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, அமைச்சா் எ.வ.வேலுவை சென்னையில் நேரில் சந்தித்து ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கோரிக்கை மனு அளித்தாா்.

பின்னா் தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவை நேரில் சந்தித்து ஆம்பூா் தொகுதியில் விடுபட்ட ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூா் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் மனு அளித்தாா்.

Advertisement

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் பெரியாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியை சந்தித்து ஆம்பூரில் மின்வாரிய ஆம்பூா் கோட்டத்தை புதிதாக உருவாக்கி கோட்ட அலுவலகத்தை, ஆம்பூரில் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் மனு அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.