முகப்பு
திருப்பத்தூர்

கரோனா பாதுகாப்பு விதிமுறைகள்: ஆம்பூரில் கோட்டாட்சியா் ஆய்வு

கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் ஆம்பூரில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 17 ஜூலை, 2021 at 10:49 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:12 AM

கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் ஆம்பூரில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் பகுதியில் கடைகள், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி ஆய்வு செய்தாா். ஆம்பூா் பஜாரில் சில கடைகளில் திடீா் சோதனை நடத்தினாா். அப்போது, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.