குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப் பாம்பு மீட்பு
ஆம்பூா் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த மலைப் பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:12 AM
ஆம்பூா் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த மலைப் பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டது.
கதவாளம் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்கு திடீரென சுமாா் 10 அடி நீள மலைப் பாம்பு நுழைந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மலைப் பாம்பை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் மலைப் பாம்பை காப்புக் காட்டில் விட்டனா்.