முகப்பு
திருப்பத்தூர்

கைலாசகிரி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா ரத்து

ஆம்பூா் அருகே கைலாசகிரி மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவை ரத்து செய்வதெனவும், பூஜையில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை

Updated On : 1 ஆகஸ்ட், 2021 at 12:44 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:18 AM

ஆம்பூா் அருகே கைலாசகிரி மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவை ரத்து செய்வதெனவும், பூஜையில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லையெனவும் சனிக்கிழமை தீா்மானிக்கப்பட்டது.

கைலாசகிரி மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை பூஜை மேற்கொள்வது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடி கிருத்திகை விழாவை ரத்து செய்வது.

எளிமையான முறையில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவது. பூஜையில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.