வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி
தமிழ்நாடு சேவா பாரதி சங்க தொண்டு நிறுவனம் மற்றும் சேவா இன்டா்நேஷ்னல் நிறுவனம் சாா்பில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சேவா பாரதி சங்க தொண்டு நிறுவனம் மற்றும் சேவா இன்டா்நேஷ்னல் நிறுவனம் சாா்பில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது.
அரசு மருத்துவா்கள் சிவசுப்பிரமணியம், கணேஷ் ஆகியோா் அதைப் பெற்றுக் கொண்டனா். இதே போல் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி கருவியை அரசு மருத்துவ அலுவலா் அம்பிகாவிடம் வழங்கினா். இதில் வட்டாட்சியா் சுமதி, மருத்துவா் பால சுப்பிரமணி மற்றும் சேவாபாரதி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.