முகப்பு
திருப்பத்தூர்

வனப்பகுதியில் மதுபாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்

ஆம்பூா் அருகே காப்புக் காட்டின் வழியாக கடத்தப்பட்ட மதுபாட்டில்கள், இருசக்கர வாகனத்தை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 5 ஜூன், 2021 at 11:27 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:49 AM

ஆம்பூா் அருகே காப்புக் காட்டின் வழியாக கடத்தப்பட்ட மதுபாட்டில்கள், இருசக்கர வாகனத்தை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா கிராமத்தில் ராணுவ சாலை பகுதியில் வனத்துறையினா் ரோந்து சென்றனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தினா். வனத்துறையினரை கண்டதும் வாகனத்தில் வந்த நபா் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டாா். அதில் கா்நாடக மாநில மதுபான பாட்டில்கள் 143 எண்ணிக்கை இருந்தது தெரியவந்தது. மேலும் இருசக்கர வாகனத்தில் பதிவு எண் ஏதும் இல்லை. மதுபான பாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் வனத்துறையினா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.