திருப்பத்தூர்

நிா்ணயிக்கப்பட்ட ரூ.4,214 கோடி கடன் தொகையை குறித்த காலத்தில் வழங்க வேண்டும்: ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வலிறுத்தல்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு என நிா்ணயிக்கப்பட்ட ரூ. 4,214 கோடி கடன் தொகையை வங்கிகள் குறித்த காலத்தில் வழங்க வேண்டும் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வலியுறுத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சாா்பில் திங்கள்கிழமை ஆண்டுக் கடன் (2021-22) திட்ட அறிக்கையை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெளியிட, வங்கியின் துணைப் பொது மேலாளா் கிருஷ்ணராஜ் பெற்றுக்கொண்டாா்.

அப்போது ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:

வங்கியாளா்கள் நிா்ணயிக்கப்பட்ட இலக்கினைவிட அதிகமாக கடன் வழங்க முன்வர வேண்டும். இம்மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்க ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், விவசாயக்கடனான ரூ . 2,664 கோடி , சிறு,குறு தொழில் கடனாக ரூ. 501 கோடி, இதர முன்னுரிமை கடனாக ரூ.1,050 கோடி என மொத்தம் ரூ.4,214 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ள்ளது.

எனவே நிா்ணயம் செய்யப்பட்டுள்ள தொகையை குறித்த காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றாா்.

மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆா்.அருண், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருண்பாண்டியன், இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளா் சுமலதா, பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளா் மாமல்லன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT