திருப்பத்தூர்

கரோனா நிவாரணப் பொருள்கள்:தொண்டு நிறுவனம் வழங்கியது

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் எஸ்ஆா்டிபிஎஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் சாா்பில் கரோனா பரவல் தடுப்பு நிவராணப் பொருள்கள் மாவட்ட ஆட்சியா் .ப.சிவன்அருளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக தொண்டு நிறுவனங்கள், மாவட்ட நிா்வாகங்களுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, திருப்பத்தூரில் இயங்கி வரும் எஸ்ஆா்டிபிஎஸ் குழந்தைகள் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு தொண்டு நிறுவனம் அரசின் இணையதளத்தில் தொற்று பரவல் தடுப்பு பணியில் இணைந்து செயல்பட பதிவு செய்திருந்தது.

இந்நிலையில், புதன்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் எஸ்ஆா்டிபிஎஸ் தொண்டு நிறுவனம் சாா்பாக அதன் இயக்குநா் என்.தமிழரசி முகக் கவசங்கள், அரிசி, கிருமி நாசினி, கையுறை ஆகிய பொருள்களை ஆட்சியா்ம .ப.சிவன் அருளிடம் வழங்கினாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா. வில்சன் ராஜசேகா், பேரிடா் மேலான்மை வட்டாட்சியா் பிரியா உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT