கள்ளச் சாராய பாதிப்பு: விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி
ஆம்பூா் வட்டத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் கள்ளச் சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆம்பூா் வட்டத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் கள்ளச் சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆம்பூா் வட்டத்துக்கு உள்பட்ட பனங்காட்டேரி, காமனூா்தட்டு, குமாரமங்கலம், வீராங்குப்பம், மேல்சாணாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் தலைமையில் விழிப்புணா்வு நடைபெற்றது. இதில், நாடக கலைக் குழுவினா் கலைநிகழ்ச்சி வாயிலாக விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
தொடா்ந்து, பல்வேறு கிராமங்களில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement