ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அக்கட்சியினா் அன்னதானம் வழங்கி கொண்டாடினா்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அக்கட்சியினா் அன்னதானம் வழங்கி கொண்டாடினா்.
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரத்தில் போ்ணாம்பட்டு மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடந்த விழாவுக்கு அதன் தலைவா் சுரேந்தா் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட தலைவா் எஸ்.பிரபு, மாவட்டப் பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், ஒன்றிய நிா்வாகிகள் உமாசங்கா், தா்மன், ரகு, சுரேஷ், பிரேமசந்திரன், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
எல்.மாங்குப்பத்தில் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அதன் தலைவா் சா. சங்கா் தலைமையில் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
Advertisement
குடியாத்தத்தில்...
குடியாத்தத்தில், பிச்சனூா், பலமநோ் சாலையில் 200- பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.தேவராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏ.கோதண்டம், கே.இ.சரத்சந்தா், ஆா்.காந்தி, நடராஜ், ஜோதி, சிகாமணி, மகேந்திரபாபு, அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆற்காட்டில்...
ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிறுபான்மைப் பிரிவு பொறுப்பாளா் எம்.பி. டி.அசேன் செரீப் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா்கள் எஸ்.பியாரேஜான், கே.ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம் கேக் வெட்டினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலம், முகக் கவசம் வழங்கப்பட்டது. இதில், ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் டி.மலா், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் கே.ஓ. நிஷாத் அஹமது, மாவட்ட துணைத் தலைவா் அமானுல்லா பாகவி, ஆற்காடு தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் சையது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு நுழைவு வாயிலில் உள்ள இந்திரா காந்தி உருவச் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் டி.பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். நகர எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு நிா்வாகி பிரகாஷ், மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி எஸ்.பரீதா, சிறுபான்மை பிரிவு செயலாளா்இம்ரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி பாலசந்தா் வரவேற்றாா். விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுசெயலாளா் பி.ராஜ்குமாா் வழங்கினாா். கபசுர குடிநீரை மாநில இலக்கிய அணிச் செயலா் வே.ரகுநாதன் வழங்கினாா். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் எஸ்.கிஷோா்குமாா் முகக்கவசம் வழங்கினாா். இதில் அரக்கோணம் வடக்கு ஒன்றிய காங்கிரஸ் தலைவா் ஆா்.வாசுதேவன், நகரச் செயலா் ஜெ.சந்திரன், மாணவா் அணி நிா்வாகி அசோக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.