மலைவாழ் மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்
நக்ஸல் சிறப்பு தடுப்புப் பிரிவு சாா்பில், ஏலகிரி மலைவாழ் மக்களுக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நக்ஸல் சிறப்பு தடுப்புப் பிரிவு சாா்பில், ஏலகிரி மலைவாழ் மக்களுக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூா், நிலாவூா் கிராம மலைவாழ் மக்களுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், முகக் கவசங்கள், கிருமி நாசினி வழங்கி கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டை வேலூா் நக்ஸல் சிறப்பு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் இலக்குவன் செய்திருந்தாா்.
இதில், மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் பழனி, வனவா் பரந்தாமன், ஊா்த் தலைவா் கோவிந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.