திருப்பத்தூர்

மின்னூரில் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வழியை மூட கிராம மக்கள் எதிா்ப்பு

DIN

மின்னூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழியை மூட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம், மின்னூா் கிராமத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் சாலையை மூடிவிட்டு, அணுகுச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மின்னூா் கிராமத்தை ஒட்டியுள்ள வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னப்பள்ளிகுப்பம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் சாலையை மூட எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, ஆம்பூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சாலை வழி மூடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT