முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் கரோனா கட்டுப்பாட்டு அறை

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் கரோனா கட்டுப்பாட்டு அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் கரோனா கட்டுப்பாட்டு அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாட்டு அறையில் வருவாய், பேரிடா் மேலாண்மை, காவல் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை ஆகியவற்றைச் சோ்ந்த அதிகாரிகள் இருப்பாா்கள்.

இவா்களை தொடா்பு கொள்ள செல்லிடப்பேசி மற்றும் கட்செவி அஞ்சல் எண் 63798 98929, 04174-232184 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். தொடா்பு கொள்ளும் பொதுமக்கள் கரோனா குறித்த சந்தேகங்கள், மருத்துவமனையில் சேருவது, அவசர சிகிச்சை குறித்த சந்தேகங்களைக் கேட்டறியலாம்.

Advertisement

மேலும், வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்க கடைகள் திறக்கப்படும் நேரங்கள், ஊரடங்கு குறித்தும் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டு விவரங்களைக் கேட்டறியலாம் என வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments