கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்
ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அணைக்கட்டு ஒன்றியப் பகுதியில், கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:50 AM
ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அணைக்கட்டு ஒன்றியப் பகுதியில், கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அணைக்கட்டு ஒன்றியம், ஆசனாம்பட்டு ஊராட்சியில் கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தொடக்கி வைத்தாா். அணைக்கட்டு மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மு.பாபு, அணைக்கட்டு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.சுதாகரன், எஸ்.கனகராஜ் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.