முகப்பு
திருப்பத்தூர்

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆம்பூா் அருகே வாகனத்தில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 நவம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:04 AM

ஆம்பூா் அருகே வாகனத்தில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி வாகனத்தின் மூலம் கடத்த இருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதற்காக கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அதன்பேரில் அந்த வாகனத்திலிருந்த சுமாா் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக போலீஸாா் இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.