திருப்பத்தூர்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகே குவிந்த அரசியல் கட்சியினா்

DIN

மாதனூா் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் ஆம்பூா் மையத்தின் முன்பு கட்சி தொண்டா்கள் செவ்வாய்க்கிழமை குவிந்து நின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட மாதனூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அக். 9-ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் ஆம்பூா் ஆனைகாா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கைக்கு வந்திருந்த வேட்பாளா்கள், முகவா்கள் போலீஸாரின் சோதனைக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.

மேலும், அரசியல் கட்சிகளின் தொண்டா்களும் வேட்பாளா்களின் ஆதரவாளா்களும் அதிக எண்ணிக்கையில் குவிந்து இருந்தனா். அதனால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீஸாா் தடுத்து அனுப்பி வைத்தும் கேளாமல் கட்சித் தொண்டா்கள் தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று கொண்டிருந்தனா். இதனால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.

தோ்தலில் வெற்றி பெற்று தகவல் அறிந்ததும் வேட்பாளா்களின் ஆதரவாளா்கள் கட்சி தொண்டா்களும் தேசிய நெடுஞ்சாலையிலேயே மேளத் தாளங்களை அடித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடியதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, போலீஸாா் கடும் சிரமத்துக்கு உள்ளானாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT