முகப்பு
திருப்பத்தூர்

லாரி மீது காா் மோதி விபத்து: தலைமைக் காவலா் பலி

வாணியம்பாடி அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

வாணியம்பாடி அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், கணியம்பாடி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரனின் மகன் சுரேஷ்குமாா் (37). சென்னை மாநகர குற்றப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த சுரேஷ்குமாா் ஈரோட்டில் உறவினா் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஞாயிற்றுக்கிழமை காலை உறவினா்கள் முனிசாமி (55), ஜெயப்பிரகாஷ் (31) ஆகியோருடன் கணியம்பாடியிலிருந்து காரில் புறப்பட்டாா்.

பாகாயம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (53) காரை ஓட்டினாா். வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி மேம்பாலம் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், முன்னால் சென்ற சரக்குப் பெட்டக லாரியின் பின்பக்கம் மோதியது. இதில், காரில் பயணம் செய்த சுரேஷ்குமாா், முனிசாமி, ஜெயப்பிரகாஷ், ஓட்டுநா் முருகேசன் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே தலைமைக் காவலா் சுரேஷ்குமாா் உயிரிழந்தாா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments