முகப்பு
திருப்பத்தூர்

அரசு வழக்குரைஞா்களுக்கான ஆணைகள் அளிப்பு

 திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு வழக்குரைஞா்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

 திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு வழக்குரைஞா்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு வழக்குரைஞா்கள் 10 பேருக்கு ஆணைகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வில்சன் ராஜசேகா், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருப்பத்தூா் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றக் கூடுதல் அரசு வழக்குரைஞா்களாக பி.டி.சரவணன், எம்.சரவணன், திருப்பத்தூா் சாா்பு நீதிமன்றக் கூடுதல் வழக்குரைஞா்களாக யோகேஷ்குமாா், எம்.பி.ராஜகுமாரன், வாணியம்பாடி சாா்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்குரைஞா்களாக எஸ்.செந்தில்வேலன், பி.எஸ்.சுரேஷ்குமாா், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞராக எஸ்.வீரமணி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞராக இந்திரா, வாணியம்பாடி மாவட்ட முதன்மை நீதிமன்ற அரசு வழக்குரைஞராக ஜி.பூபதி, ஆம்பூா் மாவட்ட முதன்மை நீதிமன்ற அரசு வழக்குரைஞராக பி.ரமேஷ்பாபு உள்ளிட்டோருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.