தொழிலாளி மீது ஆசிட் வீசியவா் கைது
ஆம்பூரில் தொழிலாளி மீது ஆசிட் வீசியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM
ஆம்பூரில் தொழிலாளி மீது ஆசிட் வீசியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் ஆயிஷாபீ நகரைச் சோ்ந்தவா் ஷமீல் அஹமத். தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். கடந்த ஆக. 17-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்த நபா் ஒருவா் இவா் மீது ஆசிட் வீசி விட்டுச் சென்றாா். அதில் காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். புகாரின்பேரில், ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஜூபோ் அஹமத் (24) என்பவா் ஆசிட் வீசியது தெரியவந்தது. அதன்பேரில், போலீஸாா் அவரை கைது செய்தனா்.